பெரும்பாலான வணிக நிறுவகங்கள் மற்றும் குடியிருப்பு வீடுகளை குறிவைத்து தொடர்ந்து சூறையாடல்இடம்பெற்று வருகிறது.
அண்மையில் பெரு வணிக நிறுவன மொன்று துப்பாக்கிதாரிகளினால் பிராம்டனில் கொள்ளையிடப்பட்டது. பிரிட்டிஷ் கொலம்பிய சந்தேக நபர் ஒருவர் கைதாக்கப் பட்டுள்ளார். சந்தேக நபர்களின் கண்காணிப்புபடங்களை வெள்ளிக்கிழமை நகரப் பாதுகாவல் பகுதி வெளியிட்டது.
“இது எங்கள் சமூகத்தை அச்சுறுத்துகின்றது. இதனைத் தடுக்க கடுமையான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புநடவடிக்கைகளை நாம் ஏற்படுத்தியுள்ளோம் எங்கள் பகுதி மக்களை பயமுறுத்துவதை நாம்பொறுத்துக்கொள்ள முடியாது, ” என்று பீல் மாநில காவல்துறைத் தலைவர் நிஷான் துரையப்பா சமீபத்தியசம்பவங்கள் குறித்து கவலை வெளியிட்டார்.
சந்தேக நபர்களை யாராவது இனங்கண்ட பொதுமக்கள் உடனடியாக குற்றவியல்பிரிவை தொடர்புகொள்ளுமாறு பிராம்டன் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.