சென்னையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் 280 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள 56 கிலோ எடை கொண்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த உதயகுமார், சென்னை பெரம்பூரை சேர்ந்த அக்பர் அலி கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் 280 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மொத்தமாக பதுக்கி வைத்திருந்த 54 கிலோ எடை கொண்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு 280 கோடி ரூபாய் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் இலங்கைக்கு போதைப்பொருளை கடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.