அண்மையில் திருமண பந்தத்திலிருந்து பிரிந்த மனைவி மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களுடன் கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ விடுமுறையை கழிப்பதற்காக ஜமெய்க்கா விஜயம் செய்ய உள்ளார்.
முன்னாள் மனைவி சோபி கிரகரி ட்ரூ மற்றும் பிள்ளைகளுடன் எதிர்வரும் 26ம் திகதி முதல் ஜனவரி மாதம் 4ம் திகதி வரையில் ஜமெய்க்காவில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் பயணக் கட்டணங்கள் உள்ளிட்ட இந்த விடுமுறை பயணத்திற்கான செலவுகளை அரசாங்கத்திற்கு பிரதமர் குடும்பம் மீள செலுத்தும் என பிரதமர் அலுவலகம் திகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.