பண்டிகைக் காலத்தில் பணவீக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக சில கனேடியர்கள் நத்தார் மற்றும் புத்தாண்டு கால வழயைமான செலவுகளை வரையறுத்துக் கொண்டுள்ளனர்.
பண்டிகைக் காலத்தில் பரிசுப் பொருட்களை கொள்வனவு செய்வதனையும் கனடியர்கள் ஒப்பீட்டளவில் குறைத்துக் கொண்டுள்ளனர்.
உறவினர்கள நண்பர்களுக்கு வழங்கப்படும் விருந்துகளும் குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆறு பேரைக் கொண்ட குடும்பமொன்றின் மரபு ரீதியான கிறிஸ்மஸ் இராப் போசன விருந்துபசாரத்திற்கு சராசரியாக 104.85 டொலர்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் உணவு வங்கிகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.