கனடாவில் வழமையாக கிறிஸ்மஸ் காலப் பகுதியில் நிலவும் கடும் குளிரான வானிலையிலிருந்து இம்முறை மாற்றம் பதிவாகியுள்ளது.
ஒன்றாரியோவின் பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் காணப்படுவதாக கனடிய சுற்றாடல் திணைக்களம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
பொதுவாக கனடாவில் வைற் கிறிஸ்மஸ் எனப்படும் பனிப்பொழிவுடனான வானிலை கிறிஸ்மஸ் காலத்தில் காணப்படும்.
எனினும், கிறின் கிறிஸ்மஸ் எனப்படும் பனிப்பொழிவு குறைந்த கிறிஸ்மஸ் பண்டிகையை மக்கள் கொண்டாடியுள்ளனர்.