Home இலங்கை அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் ‘தேசிய பாதுகாப்பு தினம்’

அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் ‘தேசிய பாதுகாப்பு தினம்’

by Jey

சுனாமி தாக்கி 19 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் ‘தேசிய பாதுகாப்பு தினம்’ இன்று(26) அனுஷ்டிக்கப்படுகிறது.

சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் வகையில் காலை 9.25 முதல் 9.27 வரை 2 நிமிட மௌன அஞ்சலியும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இன்று கொண்டாடப்படும் தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சுனாமி குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய ஒலி எழுப்பும் செயலியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி காலையில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆழிப்பேரலை என்னும் சுனாமி என்னும் பேரலை உருவாகி பல லட்சம் மக்களின் உயிர்களை காவுகொண்டது.

related posts