ரஷ்யாவுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இன்று மொஸ்கோவை சென்றடைந்தாா்.
இந்தப் பயணத்தின்போது ரஷ்ய துணைப் பிரதமரும் தொழில் மற்றும் வா்த்தகத் துறை அமைச்சருமான டெனிஸ் மாண்டுரோவைச் சந்தித்து மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவைச் சந்தித்து இருதரப்பு மற்றும் சா்வதேச பிரசிச்னைகள் குறித்து அவா் ஆலோசிக்க உள்ளாா்.
இரு தரப்பு பேச்சுவாா்த்தையின்போது வா்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு, போக்குவரத்து தொடா்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.