Home உலகம் ஈரான் சார்பு ஆயுதக்குழுக்களிற்கு எதிராக தாக்குதல்

ஈரான் சார்பு ஆயுதக்குழுக்களிற்கு எதிராக தாக்குதல்

by Jey

ஈரான் சார்பு ஆயுதக்குழுக்களிற்கு எதிராக தாக்குதலை மேற்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ படைன் உத்தரவிட்டுள்ளார்.

ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் சார்பு ஆயுதக்குழுக்கள் மேற்கொண்ட தாக்குதலில் அமெரிக்க படையினர் மூவர் காயமடைந்துள்ளதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் ஒரு அமெரிக்க இராணுவீரர் காயமடைந்தார் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு பேரவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஈரான் சார்பு கட்டைப் ஹெஸ்புல்லா மற்றும் ஏனைய குழுக்கள் ஆளில்லாத விமானம் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளன.

தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜக்சுலிவன் கிறிஸ்மஸ் விடுமுறையில் உள்ள அதிபர் பைடனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஈராக்கின் இர்பில் பகுதியில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலிற்கு பதிலடி கொடுப்பதற்கு தயாராகுமாறு பைடன் உத்தரவிட்டுள்ளார்.

அதிபரின் அதிரடி உத்தரவை அடுத்து அமெரிக்க ஈராக்கில் உள்ள ஈரான் சார்பு ஆயுதக்குழுக்களின் தளங்கள் மீதுதாக்குதலை மேற்கொண்டுள்ளது.

related posts