மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷியாவுக்கு சென்றுள்ளார்.
மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு அந்நாட்டின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர், ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன் இரு தரப்பு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை மாஸ்கோவில் நேற்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடியை ரஷியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்த அதிபர் புதின், தற்போதைய அனைத்து விவகாரங்களையும் விவாதிக்கவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான கண்ணோட்டத்தைப் பற்றி பேசவும் வாய்ப்பளிப்பதாக தெரிவித்துள்ளார்.