பிளைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட பாலஸ்தீன ஆண்களை இஸ்ரேலிய இராணுவத்தினர் நிர்வாணமாக்கி தடுத்துவைத்துள்ளதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது என சிஎன்என் தெரிவித்துள்ளது.
அந்த காணொளியில் இரண்டுசிறுவர்கள் அரைநிர்வாணமாக்கப்பட்ட நிலையில் ஒருவரின் கரத்தை மற்றவர் பிடித்தபடி நடந்துசெல்வதை வீடியோ காண்பிப்பதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.
அதேசிறுவர்கள் நிர்வாணமான நிலையில் கைகளை உயர்த்திபடி காணப்படுவதை குறிப்பிட்ட வீடியோ காண்பிப்பதாக தெரிவித்துள்ள சிஎன்என், ஏனையை ஆண்களும் கைகளை உயர்த்தியபடி காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
எனினும் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ள சிஎன்என், காசா நகரத்தில் உள்ள யார்முக் மைதானத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக தனது ஜியோலொக்கேசன் காட்டுவதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் இராணுவத்தினரிடம் இது குறித்து கருத்தை பெற முயன்றதாகவும் எனினும் அதுபலனளிக்கவில்லை எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.