கனடாவின் டர்ஹாம் மற்றும் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள இந்து கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை நடந்துள்ளது .
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், இந்து கோவில்களை உடைத்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்தது தொடர்பாக கனடா வாழ் இந்தியர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர், இந்த ஆண்டு முழுவதும் கனடாவில் உள்ள பல்வேறு இந்து கோவில்களை உடைத்து கொள்ளையடித்ததில் தொடர்புடையவர் என்று போலீசார் கூறுகின்றனர்.