உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற ‘விக்சித் பாரத் யாத்ரா’ நிகழ்ச்சியில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், “பிரதமர் மோடியின் கடந்த ஒன்பதரை ஆண்டுகால ஆட்சியில் ஒரு புதிய இந்தியா உருவாகி வருவதை நாம் பார்க்கிறோம்.
இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் நாம் அனைவரும் நேர்மையாக கடமையாற்ற வேண்டும்.
மேலும் சமூக பொறுப்புணர்வு மற்றும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
அதோடு நாம் நமது பாரம்பரியம் குறித்து பெருமை கொள்ள வேண்டும், அடிமை மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும்” என்று தெரிவித்தார்.