Home உலகம் செங்கடலில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம்

செங்கடலில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம்

by Jey

செங்கடலில் கொள்கலன் கப்பலில் ஏற முயன்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் “சிறிய படகுகளை” அமெரிக்க கடற்படை தாக்கி அழித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

யேமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பயணித்த வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அதில் கிளர்ச்சியாளர்கள் ஏறமுற்பட்ட சம்பவம் செங்கடல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வந்த சிறிய படகுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

related posts