வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கிடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் கலவரம் நீடித்து வரும்
இந்த நிலையில் , தௌபல் மாவட்டம் லிலோங் சிங்ஜாவ் பகுதியில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் மூவர் உயிரிழந்தனர்.
மேலும் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் 3 கார்களுக்கு தீ வைத்தனர்.
இந்த வன்முறை காரணமாக மெய்தி இன மக்கள் அதிகமாக வசிக்கும் பள்ளத்தாக்கு மாவட்டங்களான தௌபல், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங், விஷ்ணுபூர் ஆகிய 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.