கட்டார் தலைநகரான தோஹாவில் உலக நீர்வாழ் சம்பியஹ்ஷிப் போட்டி பெப்ரவரி 2 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.
இதில் உலகெங்கிலும் உள்ள 190க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்குபற்றுகின்றனர்.
உலகக் கிண்ண உதைபந்தாட்டம், ஃபார்முலா 1, Moto GP, முக்கிய டென்னிஸ் மற்றும் கோல்ஃப் போட்டிகள் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்திய கட்டாரில் முதன் முதலாக உலக நீர்வாழ் சம்பியன் ஷிப் போட்டி நடைபெற உள்ளது.