Home இந்தியா மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் அளித்த பேட்டியில்……

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் அளித்த பேட்டியில்……

by Jey

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்கின்றன.

மத்திய அரசு குளிர் காலத்தில் கச்சா எண்ணெய் தேவை குறைந்து இருப்பதால் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைக்க திட்டமிட்டிருப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் பரவி வந்தன

எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்கவும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.6 குறைக்கவும் மத்திய நிதி அமைச்சகம் கடிதம் அனுப்பி இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதனால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கபடுமா? என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் நிலவியது.

இந்த நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இது தொடர்பாக இன்று அளித்த பேட்டியில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்

related posts