ஒன்றாரியோ மகாணதின் பிரம்ரன் நகரில் பொலிஸ் அவசர அழைப்பு சேவைகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
911 என்னும் அவசர அழைப்பு சேவையை பிழையாக பயன்படுத்துவோர் தண்டிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பிரம்ரன் நகர மேயர் பெட்ரிக்; பிறவுண் எச்சரித்துள்ளார்.
பிரம்ரட்னில் 911 என்னும் பொலிஸ் அவசர அழைப்பு எண்ணுக்கு அதிகளவில் அழைப்புக்கள் ஏற்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இவற்றில் பல அழைப்புக்கள் தவறான நோக்கத்தைக் கொண்டவை என அவர் குறிப்பிட்டுள்ளார்