பாகிஸ்தானை சேர்ந்த விவசாயிகள் தமக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில் தமது மகள்களை பெரிய கோடீஸ்வரர்களுக்கு விற்கப்பட்டு வருகின்ற செய்தி பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 10 தொடக்கம் 12 வயதுவரையான சிறுமிகள் 40 தொடக்கம் 50 வயதுடைய கோடீஸ்வரர்களுக்கு விற்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாகிஸ்தான் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
எனவே, விவசாய செய்கைக்கு பெற்ற கடனை அடைப்பதற்காக பாகிஸ்தான் விவசாயிகள் தமது மகள்களான சிறுமிகளை விற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.