இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
சுரபயாவில் இருந்து பாண்டுங் நோக்கி சென்ற ரயில், சிகாலெங்காவில் இருந்து படாலராங் நோக்கி சென்ற பயணிகள் ரயில் மீது மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்து மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகாலெங்கா ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது 3 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயம் அடைந்துள்ளனர்.