சோமாலியா கடற்பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட வணிகக் கப்பலில் இருந்து மாலுமிகள் குழுவை மீட்பதில் இந்திய கடற்படையின் கமாண்டோக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
சோமாலியாவின் துறைமுக நகரமான அய்லில் ஆயுதமேந்திய குழுவினால் லிலா நோபோக் என்ற கப்பல் கடத்தப்பட்டதாக பிரிட்டிஷ் கடல்சார் ஏஜென்சிக்கு ஒரு துயரச் செய்தி அனுப்பப்பட்டது.
அதன்படி, இந்திய கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், லைபீரிய கொடியுடன் பயணித்த இந்த கப்பல் காப்பாற்றப்பட்டது. 21 பேர் கொண்ட கப்பலில் 15 இந்தியர்கள் உள்ளனர்.