Home இந்தியா இந்தியாவுக்கும் மாலைத்தீவுக்கும் இடையிலான சர்ச்சை குறித்து – அதீப்

இந்தியாவுக்கும் மாலைத்தீவுக்கும் இடையிலான சர்ச்சை குறித்து – அதீப்

by Jey

இந்தியாவுக்கும் மாலைத்தீவுக்கும் இடையிலான சமீபத்திய இராஜதந்திர சர்ச்சை குறித்து, மாலைத்தீவின் முன்னாள் துணைத் தலைவரும் சுற்றுலா அமைச்சருமான அகமது அதீப் கவலை தெரிவித்துள்ளார்
முய்ஸ{ அரசாங்கத்தில் இருந்த சில அமைச்சர்கள் தேர்தல்களின் போது தெரிவித்த கருத்துக்கள், அதில் இந்திய எதிர்ப்பு வர்ணனை உள்ளிட்டவை அரசியல் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டதை அதீப் எடுத்துரைத்தார்.
இந்தநிலையில் குறித்த பிரச்சினை, முழுவீச்சில் இராஜதந்திர நெருக்கடியாக மாறுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மாலைத்தீவு-இந்தியா சர்ச்சை குறித்து முய்சு அரசாங்கத்தில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட இளம் ஆர்வலர்கள் மத்தியில் பொறுப்பின் முக்கியத்துவத்தை அதீப் வலியுறுத்தினார்.
அத்துடன் மாலைத்தீவு அரசாங்கத்தின் தாமதமான பதிலையும் அவர் விமர்சித்தார்.
இதற்கிடையில் பிரச்சினை தொடர்பில் மாலைத்தீவு ஜனாதிபதி, இந்திய பிரதமரிடம் மன்னிப்பை கோரவேண்டும் என்றும் அகமது அதீப் வலியுறுத்தினார்

related posts