வற் வரி அதிகரிப்பின் பின்னர் பொதுமக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.
அரிசி, சீனி போன்ற அத்தியாவசிய பொருட்களைக்கூட வாங்க முடியாமல் மக்கள் திண்டாடுகின்றார்கள்.
எனவே, இவற்றுக்கான நிவாரணத்தை அரசாங்கம் உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரி~hட் பதியுதீன் கோரியுள்ளார்.
எதிர்காலத்தில், நாட்டுக்குத் தேவையான நல்லதொரு தலைமைத்துவத்தையும் சிறந்த ஆட்சி, அதிகாரத்தையும் கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையில், குருநாகல் மாவட்ட கட்சியின் முக்கியஸ்தர்களுடன் நாம் கலந்துரையாடியபோதே அவர் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
தற்போது நாட்டில் வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொருட்களுடைய விலை கட்டுக்கடங்காமல் அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மிகவும் பாரதூரமான கஸ்டங்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றார்கள் என்றும் ரி~hட் பதியுதீன் தெரிவித்துள்ளார்