Home விளையாட்டு பாகிஸ்தான் அணியின் உப தலைவராக மொஹமட் ரிஸ்வான்

பாகிஸ்தான் அணியின் உப தலைவராக மொஹமட் ரிஸ்வான்

by Jey

பாகிஸ்தான் டி:20 கிரிக்கெட் அணியின் உப தலைவராக மொஹமட் ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி:20 தொடருக்கு முன்னதாக இந்த நியமனம் வந்துள்ளது.

கணுக்கால் காயத்தைத் தொடர்ந்து ஓய்வில் இருக்கும் ஷதாப் கானுக்குப் பதிலாக விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான மொஹமட் ரிஸ்வான் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தெரிவித்துள்ளது.

2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தை தொடர்ந்து பாபர் அசாம், அணித் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், பாகிஸ்தான் தலைமைக் குழு மற்றும் அணியில் ஏற்பட்ட அண்மைய மாற்றமாக ரிஸ்வானின் நியமனம் அமைந்துள்ளது.

related posts