ஒன்றாரியோ மாகாணத்தின் அநேக பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக வாகனப் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் ஒன்றாரியோவின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு மற்றும் மழைவீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.
இதனால் குறித்த பகுதிகளில் வாகனப் போக்குவரத்தின் போது பல்வேறு விபத்துக்கள் பதிவாகியிருந்தன.
பல இடங்களில் வாகன விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஒன்றாரியோ பொலிஸார் அறிவித்துள்ளனர்.