தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து கவுரவப்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், ஸ்வஸ் சர்வேக்ஷான் என்ற தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் திட்டத்தை 2016-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் நாட்டில் தூய்மையில் சிறந்து விளங்கும் நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகரங்கள் பட்டியலை மத்திய அரசு இன்று வெளியிட்டது.
இந்த பட்டியலில் இந்தூர் மற்றும் சூரத் ஆகிய இரு நகரங்கள் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தூர் தொடர்ந்து 7-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.