Home உலகம் ஜப்பானில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய நிலநடுக்கம்

ஜப்பானில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய நிலநடுக்கம்

by Jey

ஜப்பானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, அங்குள்ள நோட்டோ (Noto) தீபற்பத்தின் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களை வெளிப்படுத்தும் செய்மதி படங்கள் வெளியாகியுள்ளன.

7.6 ரிக்டெர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானில் கடந்த ஜனவரி முதலாம் திகதி அந் நாட்டு நேரப்படி மாலை 4.10 மணியளவில் ஏற்பட்டது.

இது குறிப்பிடத்தக்க பாதிப்புக்களை ஏற்படுத்தியதுடன், கடலோரப் பகுதிகள் மக்கள் வெளியேறும் வகையிலான சுனாமி எச்சரிக்கையினையும் தூண்டியது.

இந்த நிலநடுக்கத்திற்கு முன்னும் பின்னும் உள்ள பகுதியின் செயற்கைக்கோள் படங்கள், தீவிர கடல் அலைகளின் எழுச்சி கடற்கரையை 820 அடி (250 மீட்டர்) நீளம் வரை நீட்டித்துள்ளதை காண்பிக்கிறது.

related posts