ரொறன்ரோவில் காசா போரின் பின்னர் இஸ்லாமிய மற்றும் யூத மதக் குரோத உணர்வு குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய பொலிஸார் இது பற்றிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டில் குரோத உணர்வு குற்றச் செயல்களின் எண்ணிக்கையானது 2022ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 43 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் 248 குரோத உணர்வு குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, கடந்த 2023ம் ஆண்டில் 353 குரோத உணர்வு குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.
யூத எதிர்ப்பு குரோத குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.