மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆற்றுக்குள் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சுமாா் 100 போ் மாயமாகி உள்ளதாக கூறப்படும் நிலையில் விபத்துப் பகுதியில் இருந்து 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
நைஜீரியா போா்கு பகுதியிலிருந்து கெப்பி மாகாணத்திலுள்ள சந்தைப் பகுதியை நோக்கி நைஜா் ஆற்றின் வழியாக அந்தப் படகு திங்கட்கிழமை சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
அளவுக்கு அதிகமான ஆட்களையும், சுமைகளையும் ஏற்றிச் சென்றதால், அந்தப் படகு கவிழ்ந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போனோரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.