கனடாவில் சிறுவர்களை அதிகளவில் ஸ்டெரப் எனப்படும் பக்ரீறியா நோய்த் தொற்று பாதிக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த பக்ரீறியா தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்த பக்ரீறியா தாக்கத்தினால் தொண்டை அழற்சி அதிகளவில் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பக்ரீறியா தாக்கத்தினால் இதுவரையில் ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். பத்து வயதுக்கும் குறைந்த சிறுவர்களே மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையில் இந்த பக்ரீறியா தாக்கத்தினால் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒன்றாரியோ மாகாண பொதுச் சுகாதார அலுவலகம் இந்த விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது.
நோய் அறிகுறிகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர்.