Home இந்தியா அயோத்தி ராமர் கோவிலில் – பக்தர்கள் வெள்ளத்தில்

அயோத்தி ராமர் கோவிலில் – பக்தர்கள் வெள்ளத்தில்

by Jey

அயோத்தி ராமர் கோவிலில் நேற்று பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்றது. பால ராமர் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கருவறையில் பூஜை செய்தார். இந்நிலையில் கோவிலில் இன்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், பின்னர் மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராமர் கோவில் பிராண பிரதிஷ்டையைக் காண அயோத்தியில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

உள்ளூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் ஏராளமான பக்தர்கள் அயோத்திற்கு வருகை தந்து உள்ளனர்.

related posts