அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவுக்கு நாடு முழுவதும் இருந்து சுமார் எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்கள் பங்கேற்பதற்காக ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் , சினிமா விளையாட்டு பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
இருப்பினும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான எம்.எஸ். டோனி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், டோனி ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது எம்.எஸ். டோனி சாதி, மதம்,அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் விருப்பம் காட்டுவது இல்லை என்பதால், இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.