நடைபெற்று வரும் ஆப்ரிக்கா நேஷன்ஸ் கிண்ணத்தில் முன்னணி கால்பந்து நட்சத்திரங்களில் ஒருவரான மொஹமட் சாலாவுக்கு ஏற்பட்ட காயம் தொடர்பில் லிவர்பூரல் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த வியாழன் அன்று ஆப்ரிக்கா நேஷன்ஸ் கிண்ணத்தில் குழு பி யில் கானாவுடனான எகிப்தின் அட்டம் 2-2 என்ற கணக்கில் சமனிலை பெற்றது.
இந்த ஆட்டத்தில் சாலாவின் காலில் தசைக் காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் தற்சமயம் மறுவாழ்வில் உள்ளார்.
சாலாவின் உடல் நிலை குறித்து தற்சமயம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள லிவர்பூல்,
தசைக் காயம் காரணமாக சலா ஆரம்பத்தில் இரண்டு ஆட்டங்களில் மட்டுமே எகிப்தால் வெளியேற்றப்பட்டார்.
மொஹமட் சலாவின் காயம் முதலில் நாம் பயந்ததை விட மோசமான நிலையில் உள்ளது.
இதனால் அவர் ஒரு மாதத்துக்கு ஓய்வில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் – என்று சுட்டிக்காட்டியது.
எனினும் ஆனால் அரையிறுதிக்குத் திரும்புவார் என்று எகிப்து நம்பிக்கையுடன் உள்ளது.