யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் ஆரம்பப்பிரிவு மாணவனான இளம் சதுரங்க நாயகன் வேணுகானன் நயனகேஷன் சர்வதேச போட்டிகளில் விளையாட தகுதிப்பெற்றுள்ளார்.
அண்மையில் கொழும்பு தர்மபால வித்தியாலயத்தில் நடைபெற்ற Sri Lanka National Youth Chess Championship 2023/24 – Finals (U08 Open) போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவான 450 வீரர்களுடன் விளையாடி, சிறந்த முதல் பத்து வீரருக்குள் தெரிவானார்.
Sri Lanka National Youth Chess Championships 2024 – Super League Events இறுதிப்போட்டியில் ஒவ்வொரு வீரருடனும் நேருக்கு நேர் மோதி தேசிய சாம்பியன் பட்டத்தை வென்று சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்றுள்ளார்.