கனடாவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா காலம் இரண்டு ஆண்டுகள் என கனடா அரசு நிர்ணயித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர், “கனடாவுக்கு கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்வி விசாக்கள் வழங்கப்பட்டன.
2023-ம் ஆண்டு 5.60 லட்சம் மாணவர் விசாக்கள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 35 சதவீதம் அளவுக்கு மாணவர் விசாக்களை குறைக்க முடிவெடுத்துள்ளோம்.
இதனால் இந்த ஆண்டு 3.64 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே விசாக்கள் வழங்கப்படும். இரண்டு ஆண்டுகள் வரை மட்டும் அந்த விசா செல்லுபடியாகும்” என தெரிவித்தார்.