அண்மையில் ஹட்டனில் நடைபெற்ற, தேசிய தைப்பொங்கல் நிகழ்விற்கு குறைந்தளவு அரசாங்க நிதியே செலவிடப்பட்டது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தேசிய தைப்பொங்கல் விழா நிகழ்வில் தென்னிந்திய நடிகைகள் பங்கேற்றமை குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இந்த நிகழ்விற்கு அனுசரணை வழங்கியிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய தேசிய நிகழ்வுகளுக்கு செலவிடப்படும் தொகைகளுடன் ஒப்பீடு செய்யும் போது மிகவும் குறைந்தளவு பணமே செலவிடப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.