கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த மற்றும் அவரது மெய்ப்பாதுகாப்பாளர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
கட்டுநாயக்கவிலிருந்து ராஜாங்க அமைச்சர் பயணம் செய்த ஜீப் வண்டி, கொள்கலன் பாரவூர்தி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த ராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் அவரது சாரதி ஆகியோர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், அமைச்சரும் அவரது மெய்ப்பாதுகாவலரும் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காலி முகத்திடலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் மீது குண்டர் குழு மே9ம் திகதி நடத்திய தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவராக சனத் நிசாந்த கருதப்படுகின்றார்.