Home இலங்கை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி

அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி

by Jey

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருடன் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து இலங்கை விலகிக் கொண்டால் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மீண்டும் நம்பிக்கை வைக்க முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைவரும் ஒன்றிணைந்து பொதுவான உடன்படிக்கையுடன் நாட்டை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், தேர்தலுக்குத் தயாராகும் பட்சத்தில் நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் திட்டமொன்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

related posts