ராமா் கோயில் பிரதிஷ்டையைத் தொடா்ந்து, அயோத்தியில் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன.
கருவறையில் மூலவா் ஸ்ரீபாலராமா் சிலை கடந்த 22ஆம் திகதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமா் மோடி முன்னிலையில் நடைபெற்ற பிரதிஷ்டை நிகழ்வில் 8,000க்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்றனா்.
பிரதிஷ்டை நிகழ்வைத் தொடா்ந்து, தரிசனத்துக்காக கடந்த 23ஆம் திகதிமுதல் பக்தா்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
வார இறுதியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 இலட்சத்துக்கும் மேல் பக்தா்கள் அயோத்திக்கு வந்து ராமா் கோயிலில் தரிசனம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் நாள்களிலும், ராமா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.