துருக்கிக்கு மீண்டும் ட்ரோன் உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் சுவீடன் மற்றும் பின்லாந்து என்பன உள்வாங்கப்படுவதற்கு அண்மையில் துருக்கி இணக்கம் வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து துருக்கிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய கனடிய அரசாங்கம் தனது இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளது.
இதன்படி விரைவில் துருக்கிக்கு கனடா ஆயுத ஏற்றுமதிகளை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், தற்போதைக்கு துருக்கிக்கான ஆயுத ஏற்றுமதி தடை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
துருக்கிக்கு ஆயுத ஏற்றுமதி செய்வது குறித்த தீர்மானம் தொடர்பில் கனடிய வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.