Home கனடா ஹவுதி போராளிகளுக்கு உதவும் கனடா

ஹவுதி போராளிகளுக்கு உதவும் கனடா

by Jey

யேமனில் ஹவுதி போராளிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு கனடா உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவும் அமெரிக்காவும் கூட்டாக இணைந்து சவுதி போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

செங்கடல் பகுதியில் சவுதி போராளிகள் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய வருகின்றன.

பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்திக் கொள்ளுமாறு கோரி ஹவுதி போராளிகள் இந்த தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தாக்குதல்களை தடுக்கும் நோக்கில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் யேமனில் அமைந்துள்ள ஹவுதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த தாக்குதல்களுக்கு அவுஸ்திரேலியா, டென்மார்க், நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

இது தொடர்பில் கனடிய அரசாங்கம் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

நேரடியான உதவிகள் அன்றி திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கனடா பங்களிப்பினை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது.

related posts