கனடா மேற்குக் கரையில் வன்முறையைத் தூண்டும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளது.
கலவரத்தைத் தூண்டுதல், தீ வைத்தல், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துதல், சேதம் விளைவித்தல், உள்ளிட்ட வன்முறை செயல்களில் நேரடியாக ஈடுபட்டதாக மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க அதிபர் பைடன் அவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தார்.
மேலும் அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது அமெரிக்காவைப் போல் கனடாவும் வன்முறையில் ஈடுபடும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள், ஹமாஸ் தலைவர்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கவுள்ளதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்தார்