Home இலங்கை இலங்கை வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை – அலிசப்ரி

இலங்கை வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை – அலிசப்ரி

by Jey

இலங்கை அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நிதியை பெறும் என வௌியுறவு அமைச்சர் அலிசப்ரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு அளித்த நேர்காணலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அமைச்சர்,

“1948 இல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து மோசமான நிதி நெருக்கடியைத் தூண்டிய அந்நியச் செலாவணி இருப்புக்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றது.

2022 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இலங்கை அதன் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.

இருதரப்பு கடன் மறுசீரமைப்பில் சுமார் 11 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதுடன், பத்திரப் பதிவுதாரர்கள் உட்பட அனைத்து முக்கிய கடன் வழங்குநர்களுடனும் மே மாதத்திற்குள் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

related posts