கனடாவில் வெளிநாட்டவர்கள் வீடு கொள்வனவு செய்வதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் கனடாவில் வீடுகள் கொள்வனவு செய்வதற்கான தடை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் நிதி அமைச்சர் கிறிஸ்டியா பீரிலாண்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2027ம் ஆண்டு வரையில் வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடுகள் கொள்வனவு செய்வதற்கான தடை நீடிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
வெளிநாட்டு பிரஜைகள், நிறுவனங்கள் கனடாவில் வதிவதற்காக வீடுகள் கொள்வனவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.