பிரிட்டிஸ் கொலம்பிய மாகாண கல்வி அமைச்சர் செலினா ரொபின்சன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இஸ்ரேலின் அமைவிடம் தொடர்பில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
வறண்ட நிலத்தில் இஸ்ரேல் உருவானது என அவர் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு பலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதன் காரணமாக அமைச்சர் ரொபின்சன் பதவி விலக வேண்டுமென இஸ்லாமிய அமைப்புக்கள் கோரியிருந்தன.
இவ்வாறான பின்னணியில் செலினா ரொபின்சன் அமைச்சுப் பதவியை துறப்பதாக முதல்வர் எபி அறிவித்துள்ளார்.
ரொபின்சன், கருத்து பிழையானது என ஒப்புக்கொண்டுள்ளார்.
மாகாணத்தின் மாகாண நிதி அமைச்சராகவும் ரொபின்சன் முன்னதாக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொபின்சன் என்.டி.பி கட்சியின் உறுப்பினராக தொடர்ந்தும் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.