Home இந்தியா புதுடில்லிக்குச் சென்றுள்ள ஜே.வி.பியின் தலைவர்

புதுடில்லிக்குச் சென்றுள்ள ஜே.வி.பியின் தலைவர்

by Jey

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தலைநகர் புதுடில்லிக்குச் சென்றுள்ள ஜே.வி.பி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழுவினர் பல்வேறு அதிகாரப்பூர்வ சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை சந்தித்த அநுரகுமார திஸாநாயக்க, இருநாட்டு அரசியல் விவகாரங்கள், பொருளாதார மறுசீரமைப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு மிகவும் தீர்மானமிக்கதொரு சந்திப்பாக அமைந்ததாக சுப்ரமணியம் ஜெய்சங்கர் தமது ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் அநுர தலைமையிலான உயர்மட்ட குழு கலந்துரையாடில்களை நடத்தியிருந்தது.

அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சில பரிந்துரைகளை வழங்கியதாக ஜேவிபியின் உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

அந்த பரிந்துரைகள் பின்வருமாறு,

கச்சதீவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைத்த மாகாண சபை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். வேண்டுமானால் சிங்களப் பிரதேசங்களின் மாகாண சபை முறையை இரத்துச் செய்யலாம்.

தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையேயான சுமார் 32 கிலோ மீட்டர் நீளமுடைய பாலத்தை அமைப்பதற்கு இணங்க வேண்டும்.

ஆகிய மூன்று பரிந்துரைகளையும் ஜெயசங்கர் வழங்கியிருக்கின்றார்.

இந்த நிலையில், புதுடில்லியில் ‘தி ஹிந்து’ பத்திரிக்கைக்கு கடந்த ஆண்டு அநுரகுமார திஸாநாயக்க வழங்கியுள்ள செவ்வியில்,

கட்சியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், இலங்கைத் தீவு நாடு எடுக்கும் எந்தவொரு முடிவும், அது இந்தியாவில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

related posts