காஸாவில் அழித்தொழிக்கப்பட்டுவரும் மின்சாரத்தை உருவாக்கி 15 வயது இளம் விஞ்ஞானி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
காஸாவில் நடந்து வரும் இஸ்ரேலின் தாக்குதல்களால் பாலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசித் தேவைகளுக்கே அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் காஸா மக்களின் வாழ்க்கையில் ஒரு இளம் விஞ்ஞானி ஒளியேற்றியிருக்கிறார்.
15 வயதான ஹுசாம் அல் – அத்தார் ‘காஸாவின் நியூட்டன்’ எனப் பெயர் பெற்றுள்ளார். கட்டடங்கள் அனைத்தும் குப்பைகளாகி, நிலை குலைந்திருக்கும் காஸாவில் கிடைத்த பொருள்களை வைத்து மின்சாரம் தயாரித்திருக்கிறார் இச்சிறுவன்.
இஸ்ரேலின் இரக்கமற்ற தாக்குதலுக்கு பயந்து இடம்பெயர்ந்த மக்கள் முகாமிட்டிருக்கும் இடங்களுக்கு காற்று மூலம் மின்சாரம் தயாரிக்க வழிவகை செய்துள்ளார் ஹுசாம்.