Home இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி ஜனாதிபதி மூச்சுக்கூட விடவில்லை – சுமந்திரன்

இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி ஜனாதிபதி மூச்சுக்கூட விடவில்லை – சுமந்திரன்

by Jey

இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி ஜனாதிபதி தமது கொள்கை விளக்க உரையில் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை என நாடாளுமன்றில் சுமந்திரன் தெரிவித்தார்.

பதவியேற்ற தருணத்தில் உடனடியாக இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணுவோம் என அவர் கூறியதுடன், நீங்கள் தயாரா? நீங்கள் தயாரா? என சபையின் இரு பக்கங்களிலும் அமர்ந்திருந்தவர்களை பார்த்து கேள்வியெழுப்பியிருந்தார்.

அனைத்துக் கட்சி மாநாடுகளை மூன்றுமுறை நடத்தியிருந்த ஜனாதிபதி, 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினை தீர்க்கப்படும் எனக் கூறியிருந்தார்.

75ஆவது சுதந்திர தினமும் முடிந்துவிட்டது. ஆனால், இனப்பிரச்சினை பற்றி மூச்சுக்கூட விடவில்லை. இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண அவருக்கு அரசியல் பலம் கிடையாது என நாம் கூறினோம்.

இனப்பிரச்சினைக்கான தீர்வை எதிர்ப்பவர்களை கொண்டு இதற்கு தீர்வுகாண முடியாதெனவும் கூறினோம். வார்த்தை ஜாலங்களால் எம்மை ஏமாற்றினார். ஆனால், நாம் முழுயைான ஒத்துழைப்பை வழங்கினோம்.

அடுத்த கூட்டத்திற்கான திகதி மாத்திரமே நடைமுறைப்படுத்தப்படும் ஒரே முடிவாக உள்ளதாக 4ஆவது சந்திப்பில் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்துப் பிரச்சினைக்கும் அத்திவாரமாக உள்ளது தமிழ்த் தேசியத்துக்கான இனப்பிரச்சினைதான். தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படாமல் இந்த தீர்மானத்தை எடுத்தாலும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது.” என்றார்.

 

 

 

related posts