Home விளையாட்டு உதைபந்தாட்டப் போட்டியை மேம்படுத்துவதற்காக நீல நிற அட்டை அறிமுகம்

உதைபந்தாட்டப் போட்டியை மேம்படுத்துவதற்காக நீல நிற அட்டை அறிமுகம்

by Jey

சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியை மேம்படுத்துவதற்காக நீல நிற அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வீரர்கள் இழிந்த தவறு செய்தால் அல்லது நடுவருடன் கருத்து வேறுபாடு பட்டால் நீல அட்டை காட்டப்பட்டு 10 நிமிடங்களுக்கு அவர்கள் மைதானத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்.

இரண்டு முறை நீல அட்டை காட்டப்பட்டால் அந்த வீரர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்.

1970 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் மஞ்சள் , சிவப்பு அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் விளையாட்டில் பயன்படுத்தப்படும் முதல் புதிய அட்டை இதுவாகும்.

related posts