இஸ்ரேல் – பாலஸ்தீன யுத்தத்தில் அமெரிக்காவின் முடிவினால் இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு பாதிக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பின் காரணமாக இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவினை ஏற்படுத்துவது பாதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சீன – ரஷ்ய ஈரானிய மூலோபாயங்கள் அமெரிக்காவின் ஆதிக்கத்தினை மிகச்சரியாக தாக்குகின்றன எனவும் அமெரிக்காவை மேலும் பலவீனமாக்குகின்றன எனவும் ரணில் கூறியுள்ளார்.