கனடாவிற்கு, ஜோர்தான் மன்னர் நாளை மறுதினம் விஜயம் செய்ய உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.
ஜோர்டான் மன்னரின் கனடிய விஜயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக காசாவில் பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பில் விசேடக் கவனம் செலுத்தப்பட உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.